யாரோ செய்த தவறுக்கு ஆசிரியர்கள் பொறுப்பா...? தினமலரின் வன்மம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 28 سبتمبر 2023

யாரோ செய்த தவறுக்கு ஆசிரியர்கள் பொறுப்பா...? தினமலரின் வன்மம்

யாரோ செய்த தவறுக்கு ஆசிரியர்கள் பொறுப்பா...? தினமலரின் வன்மம்



தெரிந்தே தவறு செய்தாலும் தப்பிக்கலாம் - முதல்வரின் மாவட்டத்தில் 'ஆய்வு' கூத்து

திருவாரூர் பகுதியில், சட்டசபை பொதுக்கணக்கு குழு, அதன் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், திருவாரூர் அருகே வேளுக்குடியில் அரசு மற்றும் தொடக்கப்பள்ளியில் மேல்நிலை ஆய்வு நடத்தியது.

அப்போது, பள்ளி வளாகத்தில் பீர் பாட்டில்கள் கிடந்துள்ளது. அத்துடன், பள்ளியின் கழிவறைகள் மாணவ, மாணவிகள் பயன்படுத்த முடியாத வகையில் இருந்ததால், கோபமடைந்த குழுவினர், "உங்கள் வீட்டில் இப்படித்தான் கழிவறையை பயன்படுத்துவீர்களா? மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை இப்படி வைத்தி ருக்கலாமா?” என்று குழுவினர், பள்ளி நிர்வாகத்தைக் கடிந்துகொண்டனர். அத்துடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, 2 தலைமை ஆசிரியர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி, கலெக்டருக்கு உத்தரவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பள்ளியின் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படும் என பெற்றோர்கள் நினைத்தனர்.

ஆனால், அதன்பின்னர்தான் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது. முதல்வரின் மாவட்டத்தில், ஆய்வு நடந்து, சஸ்பெண்ட் செய்திகள் வெளியானால், முதல்வரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்குமே என்று சங்கடப்பட்ட கலெக்டர் சாருஸ்ரீ, சட்டசபை பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம், சூழலை மெல்ல எடுத்துக் கூறினார். அவங்க ரொம்ப நல்லவங்க... இனிமே அப்படி நடக்காது'என கலெக்டர் பரிந்துபேச, வேறுவழியின்றி சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. பள்ளியில், அந்தப் பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது என நிருபர்களிடம் தெரிவித்தார்".

பள்ளிக்கூடத்தில் சோதனைக்கு வர்றவங்க, நேர்மையாக நடவடிக்கை எடுப்பாங்கன்னு பார்த்தால், தவறுக்கு காரணமாக அதிகாரிங்களை காப்பாற்றுவதில் கவனமா இருக்குறாங்களே, அப்புறம் பள்ளி நிர்வாகம் எப்படி சீரும் சிறப்புமா செயல்படும். அரசுப் பள்ளிகளை காப்பாற்ற யாருமே இல்லையா?" கொதிக்கின்றனர் பெற்றோர்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.