வெளுத்து வாங்கும் கனமழை - இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 25 سبتمبر 2023

வெளுத்து வாங்கும் கனமழை - இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு



வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வேலுரில் பெய்ய பலத்த மழை காரணமாக முள்ளிப்பாளையம், மாங்காய் மண்டி பகுதியில், ஆங்காங்கே இடுப்பளவு மழை நீர் தேங்கியுள்ளது.

முள்ளிப்பாளையம் அவுலியா தெருவில் உள்ள பாரதி அரசு நிதியுதவி பெறும் பள்ளியை சுற்றியும் மழை நீர் இடுப்பளவு தேங்கி நிற்பதால், பள்ளி வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலையில் மாண மாணவிகளை சாலையோரம் உள்ள கோயிலில் அமர வைத்து பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (26.09.2023) ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.