14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர் - பல்வேறு தரப்பினர் பாராட்டு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 7 سبتمبر 2023

14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர் - பல்வேறு தரப்பினர் பாராட்டு!

14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியர் பல்வேறு தரப்பினர் பாராட்டு



ஜெயங்கொண்டம் அருகே கடந்த 14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அறிவியல் ஆசிரியர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணி' யாற்றி வருபவர் செங்குட்டுவன் (வயது 56). செங்குட்டுவன் இவர் கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்துள்ளார். மேலும், பள்ளி மாணவர்களின் நலனை கருதி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பாடம் நடத்தி வருகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற் காக நடுநிலைப்பள்ளியில் தனியேஓர் அறிவியல் ஆய்வகம் அமைத் துள்ளார். மேலும், பள்ளி வளாகத்தில் மூலிகை மற்றும் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளார். இதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகளை பள்ளியின் சத்துணவு திட்டத்திற்கு வழங்கியுள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.