2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 19, 2023

2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு - PDF

மே 5ம் தேதி 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு;

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

National Testing Agency Releases Examination Calendar for Academic Year 2024-25

The Ministry of Education (MoE), Government of India (GoI) has established the National Testing Agency (NTA) as an independent, autonomous, and self-sustained premier Testing Organization under the Societies Registration Act (1860) for conducting efficient, transparent, and international standardized tests in order to assess the competence of candidates for admission to premier Higher Educational Institutions.

For the Academic year 2024-25, following is the Calendar for some major examinations to be conducted by the NTA:

The Examination Specific details shall be informed to candidates through the Information Bulletin of respective examinations, which will be published at the time of launch of Registration Forms of these examinations. The results of all CBT Examinations shall be announced within three weeks of the conclusion of the examination. For NEET (UG) 2024, the results shall be declared by second week of June, 2024.

For further clarification related to the examination dates and other instructions, the Candidates are advised to visit the official website of NTA www.nta.ac.in for the latest updates. 2024-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கு பல்கலைக்கழகங்கள், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜேஇஇ முதல் தேர்வு ஜனவரி 24, 2024 முதல் பிப்ரவரி 1, 2024 வரையும், ஜேஇஇ இரண்டாம் தேர்வு ஏப்ரல் 1, 2024 முதல் ஏப்ரல் 15, 2024 வரையும் நடைபெறவுள்ளது.

மேலும், இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு(நீட்) மே 5, 2024 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், க்யூட் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15, 2024 முதல் மே 31, 2024 வரையும், முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 11, 2024 முதல் மார்ச் 28, 2024 வரையும் நடைபெறவுள்ளது.

யுஜிசி-நெட் முதல் தேர்வுகள் ஜூன் 10, 2024 முதல் ஜூன் 21, 2024 வரையும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. NTA - National Testing Agency Releases Examination Calendar for Academic Year 2024-25 - PDF

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.