எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகிய ஆசிரியர்.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 سبتمبر 2023

எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகிய ஆசிரியர்..

எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகிய ஆசிரியர்..

கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

முன்னிலை. திரு.பெயழனிச்சாமி.எம்.எஸ்.சி.,எம்பாட்., ந.க.எண் 511/அ1/2023 நாள் 28.08.2023

பொருள்

தொடக்கக் கல்வி - கொல்லிமலை ஒன்றியம், ஆலத்தூர்நாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் திரு.கே.கே.குப்பண்ணன் என்பாரின் 07.06.2023 முதல் பணிவிலகல் கடிதம் பெறப்பட்டது - தொடர்பாக.

பார்வை

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின்(தொடக்கக் கல்வி) செயல்முறைகள் ஒ.மு.எண் 2688/அ6/2023 நாள் 10.07.2023

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், ஆலத்தூர்நாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய திரு.கு.க.குப்பண்ணன் என்பார் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனித்தனி வகுப்புகளாக பாடநூல்கள் மூலம் கற்பிக்காமல் வகுப்புகளை ஒன்றினைத்து பயிற்சி புத்தகங்கள் மூலம் கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனது ஆசிரியர் பணியிலிருந்து 07.06.2023 முற்பகல் முதல் விலகிக் கொள்கிறேன் என்று நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொடக்கக்கல்வி) தெவிரிந்த கடிதத்திற்கு சம்மந்தப்பட்ட ஆசிரியரை விசாரணை செய்து, பணியிலிருந்து விலகும் பட்சத்தில் உரிய கருத்துருக்களுடன் அனுப்பிவைக்குமாறு பார்வையில் காணும் செயல்முறைகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர் திரு.கு.க.குப்பண்ணன் என்பார் ஆசிரியர் பணியிலிருந்து 07.06.2023 முற்பகல் முதல் விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்தமைக்கு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலகத்திற்க 08.09.2023 அன்று காலை 10.00 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மந்தப்பட்ட ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.