ஆசிரியர் டிப்ளமா தேர்வு: நாளை மறுநாள் ரிசல்ட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 24, 2023

ஆசிரியர் டிப்ளமா தேர்வு: நாளை மறுநாள் ரிசல்ட்

ஆசிரியர் டிப்ளமா தேர்வு: நாளை மறுநாள் ரிசல்ட்

ஆசிரியர் கல்வியியல் டிப்ளமா தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகின்றன.

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில், டிப்ளமா ஆசிரியர் படிப்புக்கான தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் வரும், 27ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படும். அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் நகல் பெறவும், இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 5 மாலை 5:00 மணிக்குள், உரிய கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றால் மட்டுமே, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.