மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு - 1 அக்டோபர் 2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 26 سبتمبر 2023

மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு - 1 அக்டோபர் 2023

மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு

1 அக்டோபர் 2023 - ஞாயிறு - காலை 9 மணி முதல் 6 மணி வரை நீதியரசர் கிருஷ்ண ஐயர் அரங்கு, கே.கே.நகர், மதுரை - 20.

தமிழகம் கல்வியில் உச்சத்தைத் தொட்டுள்ளது என்ற பிரச்சாரம் ஓங்கி ஒலிக்கும் வேளையில் கற்பித்தலின் அடிக்கல்லாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் நிலை அவலமாகவே உள்ளது. நிலையற்ற பணியில் மிகவும் குறைந்த ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணி புரிந்து வரும் ஆசிரியர்களின் பிரச்சினைகள் வெறும் ஊதியப் பிரச்சினை மட்டுமல்ல. அது கல்வியின் பிரச்சினை. வரும் தலைமுறைக்கு வழங்கப்படும் கல்வியின் நிலை குறித்தப் பிரச்சினை மக்கள் பிரச்சினை. சுயநிதி கல்வி நிறுவனங்களில்தான் மிக மிக குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற நிலை பரவி அரசு கல்விக் கூடங்களிலும் பரவி அது நிலைபடுத்தப்பட்டும் உள்ளது. இனி அரசு ஆசிரியர்களை நிலையான பணியில் நியமிப்பது என்பது மிக மிகக் குறைவாகவே அமையக்கூடும். நிலையான பணி என்றால் ஊதியம் அரசு விதிகளின் படி வழங்க நேரிடும் அதைத் தவிர்க்கவே அரசு விரும்புகின்றது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.