உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்தை நடைமுறை படுத்த உத்தரவு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 19 سبتمبر 2023

உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்தை நடைமுறை படுத்த உத்தரவு!!



நீதிமன்ற உத்தரவின் மீது தங்களது கவனத்தை கொணர விழைகிறேன். மேற்காணும் நீதிமன்ற உத்தரவில் , கூடுதல் அரசு வழக்கறிஞர் முன் வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு இந்நீதிமன்றம் , IFHRMS திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறும் பள்ளிகளில் இந்நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஆறு மாதங்களுக்குள் நடைமுறை படுத்தும் பொருட்டு 07.04.2022 தேதியிட்ட இணை இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணையினை மூன்று மற்றும் நான்காம் பிரதிவாதிகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மேற்படி திட்டத்தை நடைமுறை படுத்த உத்தரவிடபட்டுள்ளது.

எனவே , மேற்படி நீதிமன்ற உத்தரவிற்கிணங்க நாளது தேதிவரை ATBPS முறையில் பட்டியல் தயார் செய்து தொடர்புடைய கருவூலங்களில் சமர்ப்பித்து வரும் பள்ளிகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் IFHRMS முறையில் தயார் செய்து தரப்படும் பட்டியல்களை மட்டுமே ஏற்பளிப்பு செய்யப்படும் எனவும்.

ATBPS முறையில் சமர்ப்பிக்கப்படும் பட்டியல்கள் ஏற்பளிப்பு செய்ய இயலாது எனவும் தெரிவிக்கலாகிறது .

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.