கனமழை விடுமுறை அறிவிப்பு - 21.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 20 سبتمبر 2023

கனமழை விடுமுறை அறிவிப்பு - 21.09.2023

கனமழை விடுமுறை அறிவிப்பு - 21.09.2023

கனமழை விடுமுறை அறிவிப்பு - 21.09.2023

கனமழை விடுமுறை காரணமாக வேலூர் மாவட்டத்தி 1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

6-8 -ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் தேர்வு நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று (செப். 21) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி , நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மழை காரணமாக விடுமுறை விடப்படுகிறது. அதேசமயம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது” எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே இலேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.