அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் CEO முக்கிய உத்தரவு - செயல்முறைகள் நாள். 22.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 22 سبتمبر 2023

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் CEO முக்கிய உத்தரவு - செயல்முறைகள் நாள். 22.09.2023

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் CEO முக்கிய உத்தரவு - செயல்முறைகள் நாள். 22.09.2023 மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் நாள். 22.09.2023

பள்ளிக் கல்வி - மயிலாடுதுறை மாவட்டம் - பள்ளி மாணவர்களிடையே சாதி, மத உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர் திரு.k.சந்துரு அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கடிதம் - அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து ஒப்புதலை பெற்று அனுப்பி வைக்க கோருதல் -சார்பு. பார்வையில் காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளுக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே சாதி, மத உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர் திரு.k.சந்துரு அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கடிதத்தினை அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு பள்ளித் தலைமையாசிரியர்களிடமிருந்து ஒப்புதலை பெற்று 25.09.2023க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.