CEO - கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 2 سبتمبر 2023

CEO - கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு.



CEO - கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - கூடுதல் பொறுப்பு - திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரு.அ.புகழேந்தி மற்றும் திரு.து.கணேஷ்மூர்த்தி ஆகியோர்கள் முறையே 03.09.2023 முதல் 10.09.2023 முடிய மற்றும் 05.09.2023 முதல் 10.09.2023 முடிய நாட்களில் வெளிநாட்டில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா மேற்கொள்ள இருப்பதால் - முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை...

பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரு.அ.புகழேந்தி மற்றும் திரு.து.கணேஷ்மூர்த்தி ஆகியோர்கள் முறையே 03.09.2023 முதல் 10.09.2023 முடிய மற்றும் 05.09.2023 முதல் 10.09.2023 முடிய நாட்களில் வெளிநாட்டில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா மேற்கொள்ள இருப்பதால் - முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்குதல் - சார்ந்து. பார்வை: சென்னை - 6, பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்

(மேல்நிலைக் கல்வி) அலுவல்சாராக்குறிப்பு ந.க.எண். 19523/எம்/இ2/2023, நாள்: 28.08.2023

திருவாரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரு.அ.புகழேந்தி மற்றும் திரு.து.கணேஷ்மூர்த்தி ஆகியோர்கள் முறையே 03.09.2023 முதல் 10.09.2023 முடிய மற்றும் 05.09.2023 முதல் 10.09.2023 முடிய உள்ள நாட்களில் வெளிநாட்டில் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா செல்வதால் அப்பணியிடத்திற்கு கீழ்க்காணுமாறு முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.

மேற்படி கூடுதல் பொறுப்பேற்கும் அலுவலர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 10.09.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கும் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கொள்குறிவகை தேர்வு சார்ந்த பணிக்கும். அலுவலர் மீளப் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் முழுக் கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.

பொறுப்பு ஏற்பு மற்றும் ஒப்படைப்பு அறிக்கைகளை உடனடியாக இவ்வலுவலகத்திற்கும் தொடர்புடைய இதர அலுவலகங்களுக்கும் அனுப்புமாறு சார்ந்த அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD CEO - கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.