ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 5 سبتمبر 2023

ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆசிரியர் தினவிழாவில் ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 390 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தி.மு.க. எம்.எல்.ஏ. அண்ணாநகர் மோகன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்கள்.

அமைச்சர் உறுதி விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

CLICK HERE TO ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன ஹேப்பி நியூஸ்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.