6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - ‘கேம்’ விளையாட தாயார் செல்போன் தராததால் துயர முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 8 سبتمبر 2023

6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - ‘கேம்’ விளையாட தாயார் செல்போன் தராததால் துயர முடிவு

பட்டுக்கோட்டையில் 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

‘கேம்’ விளையாட தாயார் செல்போன் தராததால் துயர முடிவு


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகு தியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மகன் அன் பரசு(வயது 12). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் தினமும் செல்போ னில் ‘கேம்' விளையாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மாணவன் அன்பரசு, தனது தாயார் ரஞ்சிதாவிடம் விளையாடுவதற்காக செல்போனை கேட்டுள்ளான.

அதற்கு அவரது தாயார், செல்போனை கொடுக்க மறுத் துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் அன்பரசு உடனே வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை பூட் டிக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவன் அன்பரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக் கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.