தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 4 سبتمبر 2023

தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தாய் தந்தைக்கு அடுத்து 3ஆவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘மாணவச் செல்வங்களின் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்நாள் எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே ஆசிரியர்கள்; தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.