வெளிநாடு பல்கலை படிப்பு தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 25 أغسطس 2023

வெளிநாடு பல்கலை படிப்பு தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு



வெளிநாடு பல்கலை படிப்பு தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தாட்கோ (TAHDCO) எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வாயிலாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறியவர்கள், வெளிநாடு சென்று புகழ்பெற்ற பல்கலைகளில் உயர்கல்வி படிக்க, தகுதித்தேர்வுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

தகுதித்தேர்வுக்கான பயிற்சிகள் பெற, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, வேளாண் அறிவியல், பொருளாதாரம், கணக்கியல் நிதி, சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை படிக்க விரும்புபவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர், www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.