ஊடகம் மற்றும் பத்திரிகை செய்தி
~~~
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி குருவராஜ கண்டிகை அரசு உயர்நிலைப்பள்ளி தற்காலிக ஆசிரியராக பணியாற்றிவரும் மோகன் என்பவரை காலணி கொண்டு தாக்கியவர்களை உடனே கைது செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வலியுறுத்தல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூலப்பேடு திடீர் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் செவந்தி ஆகியோரின் மகன் ஹரிஹரன் குருவராஜ கண்டிகை அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் நேற்று (07.08.2023 ) மதியம் தற்காலிக ஆசிரியராக பணியாற்றிவரும் மோகன் என்பவர் மாணவர் ஹரிஹரனை அடித்ததாக சொல்லப்படுகிறது, கேள்விப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பலர் இன்று காலை பள்ளிக்கு வந்து ஆசிரியர் மோகன் அவர்களை ஒருமையில் பேசி தான் அணிந்திருந்த காலணிகளை கயற்றி அடித்ததும் கைகளால் ் தாக்கியது நெஞ்சை பதப்பதைக்க வைக்கிறது இந்த சம்பவத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது , தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்கா வண்ணம் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே கொண்டு வந்து தொடர்ந்து ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் , மதிப்புமிகு தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.