இனிமேல் கூடாது... ஆசிரியர்கள் டி-சர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை... அதிரடி உத்தரவிட்ட அரசு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 22 أغسطس 2023

இனிமேல் கூடாது... ஆசிரியர்கள் டி-சர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை... அதிரடி உத்தரவிட்ட அரசு!



இனிமேல் கூடாது... ஆசிரியர்கள் டி-சர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை... அதிரடி உத்தரவிட்ட அரசு!

அசாமின் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் டி-சர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆடைக் குறியீட்டின்படி, இதுபோன்ற ஆடைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அசாம் மாநில உயர்கல்வித் துறை ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “சில உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் உடையை அணியும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் டி-சர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும். ஆண் ஆசிரியர்கள் வேட்டி-பைஜாமா அல்லது பொருத்தமான சட்டை மற்றும் பேண்ட் அணிந்து பணிக்கு வரலாம். பெண் ஆசிரியர்களும் "கண்ணியமான" சல்வார் சூட்கள், புடவைகள், மெகேலா சாதர் மற்றும் பிற பாரம்பரிய உடைகளை அணிந்து பணிக்கு வரவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் நேர்த்தியான, அடக்கமான மற்றும் பொருத்தமான ஆடைகளை நிதானமான வண்ணங்களில் அணிய வேண்டும். அது பகட்டாகத் தெரியக்கூடாது. பார்ட்டி மற்றும் கேசுவல் உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆடைக்கட்டுப்பாடு

ஆசிரியர்கள், குறிப்பாக தங்கள் வேலையைச் செய்யும்போது, எல்லாவிதமான நாகரிகத்துக்கும் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதால், பணியிடத்தில் அலங்காரம், கண்ணியம், தொழில்முறை மற்றும் தீவிரமான நோக்கத்தை வெளிப்படுத்தும் ஆடைக் குறியீட்டைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்று அரசாங்கம் கூறியது. அரசின் ஆடைக் கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு, ஆதரவு என இரு தரப்பு கருத்துகளும் வெளியாகி வருகின்றன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.