TNPSC - தலைவர் நியமனம்: கோப்புகளைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 22 أغسطس 2023

TNPSC - தலைவர் நியமனம்: கோப்புகளைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்!



டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இப்பதவியில் உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வுபெற வேண்டும், ஆனால் சைலேந்திர பாபுவுக்கு 61 வயதாகிவிட்டது, எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுபினார்.

இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.

நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.