ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் இனிப்புப் பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 9 أغسطس 2023

ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் இனிப்புப் பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு!!

ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் இனிப்புப் பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு!!



கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப். 17ம் தேதி நடந்தது.

அதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்பில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்புபொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசும் அரசாணை வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில், ஜூன் 3 கோடை விடுமுறை என்ற காரணத்தினால் ஆகஸ்ட் 14ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவ, மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 லட்சம் குழந்தைகளும் இதன் மூலம் பயன் பெறுவர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.