பகுதி நேர பயிற்றுநர் (உடற்கல்வி) இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 28 أغسطس 2023

பகுதி நேர பயிற்றுநர் (உடற்கல்வி) இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

பகுதி நேர பயிற்றுநர் (உடற்கல்வி) இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

பகுதி நேர பயிற்றுநர் (உடற்கல்வி) இடமாறுதல் கலந்தாய்வு 07.09.2023க்கு ஒத்திவைப்பு!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுர்கள் (உடற்கல்வி) - நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட மாறுதல் கலந்தாய்வு காலிப்பணியிட விவரம் பதிவேற்றுதல் மற்றும் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்தல் - தொடர்பாக. மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் நக.எண் 2665 / C1 /பநேப/ ஒபக/2023, நாள் 01.08.2023

பார்வை:

பார்வையில் கண்ட செயல்முறைகளின்படி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் (உடற்கல்வி) மாறுதல் கலந்தாய்வு 29.08.2023 அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் 05.09.2023 குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 29.08.2023 அன்று ஓணம் பண்டிகை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளதால், மாறுதல் கலந்தாய்வு 07.09.2023 அன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.