ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை அறிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 22, 2023

ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை அறிக்கை!

ஆக.26-ல் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்டிசி ஸ்டோர் கீப்பர் நிலை-3 பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறுகிறது.

எனவே தேர்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருகிற 26-ம் தேதி(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு சுமுகமான முறையில் நடைபெற அனைத்து பள்ளி முதல்வர்களும் ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் வரும் 27ந்தேதி இளநிலை எழுத்தர் தேர்வு நடைபெறவுள்ளதால், 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை;

கோடை விடுமுறையை ஈடு செய்ய 26ம் தேதி பள்ளிகள் இயங்கும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், தேர்வு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.