சுதந்திர தினம் கொண்டாடாத தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 16 أغسطس 2023

சுதந்திர தினம் கொண்டாடாத தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்



சுதந்திர தினம் கொண்டாடாத தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

ஷிவமொகா : பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடாத தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஷிவமொகா ஷிகாரிபுராவின் எளநீருகொப்பா கிராமத்தின் அரசு பள்ளியில் சுதந்திர தினத்தின் மகத்துவம், தியாகிகளை பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை. நேற்று சுதந்திர தினமும் கொண்டாடவில்லை; கொடியேற்றவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த கிராமத்தினர், கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதை தீவிரமாக கருதிய கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியை லலிதாவிடம் விசாரித்தனர்.

அவரோ, 'பள்ளியின் கொடிக்கம்பம் சிதிலம் அடைந்துள்ளது. எனவே கொடியேற்றவில்லை. சுதந்திர தினம் கொண்டாடவில்லை' என பதில் அளித்தார்.

அதிகாரி பள்ளிக்கு சென்று, கொடிக்கம்பத்தை ஆய்வு செய்த போது, எந்த பாதிப்பும் ஏற்படாதது தெரிந்தது. இதையடுத்து, லலிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.