நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டதால் சோகம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 13 أغسطس 2023

நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டதால் சோகம்!

நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டதால் சோகம்!

நீட் தேர்வில் தோல்வி; தந்தையும் தற்கொலை!

சென்னை குரோம்பேட்டை அருகே நேற்று முன் தினம் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர், நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!

மகனின் சாவுக்கு நீட் தேர்வுதான் காரணம் என பேட்டியளித்திருந்தார். மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்!

நீட் தேர்வில் தோல்வியுற்றதால் மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதைத் தொடர்ந்து சோகத்தில் தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 20 லட்சத்து 87 ஆயிரத்து 449 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

499 நகரங்களில் அமைந்துள்ள 4,097 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 449 பேர் தேர்வெழுதினர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 95 ஆயிரத்து 824 மாணவிகள், 51 ஆயிரத்து 757 மாணவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் எழுதினார்கள். அதன்படி நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ம் தேதி வெளியானது. இந்த நிலையில் குரோம்பேட்டை குறிச்சி நகரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றதால் மருத்துவராக முடியாத மன விரக்தியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மாணவரின் தந்தையான போட்டோ கிராபர் செல்வம் என்பவரும் மகன் இறந்த விரக்கியில் தூக்கிட்டு தற்கொலை. மகன் இறந்த விரக்தியில் இருந்த அவர் கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் மகனும்ழ் தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.