பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை - WhatsAppல் பரவும் தவறான தகவல் - ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - PROCEEDINGS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 22 أغسطس 2023

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை - WhatsAppல் பரவும் தவறான தகவல் - ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - PROCEEDINGS



நாமக்கல் மாவட்டம் - குழந்தைகள் நலன் - மாவட்ட குழந்தைகள் அலகு - அரசின் திட்டம் குறித்து தவறான தகவல் பரவியது - பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் - அனுமதி வேண்டுதல் - தொடர்பாக,

பார்வை:

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கடித ந.க.எண். 1190/மா.கு.பா.அ/நாமக்கல் /2023 நாள் 24.07.2023

நாமக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் ஒற்றைப் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை பெற இயலும் என்ற தவறான தகவலை வாட்ஸ் ஆப் மூலம் சிலர் பரப்பி வருகின்றனர் என பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்காண் பொருள் சார்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு, பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

மேலும் ஒற்றைப் பெற்றோரை இழந்த குழந்தையுடன் தற்பொழுது உள்ள பெற்றோர் தீராத வியாதியினால் பாதிக்கப்பட்டு வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட முடியாத சூழவில் இருந்தால் மட்டுமே அக்குழந்தைகளுக்கும் நிதி ஆதரவுத் திட்டத்தின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கிட இயலும்

இந்நிலையில் அரசின் திட்டம் குறித்து முழுமையாக அறியாமல் சிலர் வாட்ஸ் ஆய் மூலம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அந்த நகவல் மூலம் சில பள்ளி தலைமையாசிரியர்கள் ஒற்றைப் பெற்றோரை இழந்த குழந்தைகளை கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து' 'பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் இணைப்பில்காண் தவறான தகவல் குறித்து சுற்றறிக்கையின் மூலம் தெரியப்படுத்துமாறு தங்களனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இணைப்பு :

தவறாக பரவிய வாட்ஸ் ஆப் வழிச் செய்தி,


ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.