தமிழகத்தில் 1,753 பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன - மக்களவையில் மத்திய அரசு தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 2 أغسطس 2023

தமிழகத்தில் 1,753 பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன - மக்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் 1,753 பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன - மக்களவையில் மத்திய அரசு தகவல்

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணாதேவி,. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒப்பளிக்கப்பட்ட மொத்த ஆசிரியர் பணி இடங்கள் 1,44,968 எனவும் அதில் 143215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஜக ஆளும் குஜராத்தில் 19,963; மத்தியபிரதேசத்தில் 69,667; உத்தரப்பிரதேசத்தில் 1,26,028 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முன்பு பாஜக கூட்டணி ஆட்சி செய்த பீகாரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 1,87,209 ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 949 இடங்கள் காலியாக உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.