அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 12/07/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 13, 2023

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 12/07/2023

Order giving guidelines for conducting special meeting of School Management Committee in Government Higher Secondary and Secondary Schools - Proceedings of Director of State Programs - 12/07/2023 - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்கி உத்தரவு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - 12/07/2023

ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வி, சென்னை 600006

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்:1680/A11/பமேகு/ஒபக/2023

நாள்:12/07/2023.

பொருள்:

ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மைக் குழு-அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடத்துதல் வழிகாட்டுதல்கள் வழங்குதல்-சார்பு.

பார்வை:

பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண். 2223 / C7 / பமேகு ஒப/2022, நாள்: 21.07.2022

பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது மாதந்தோறும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் பங்கெடுத்துப் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் துணை நிற்கும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், பள்ளித் தலைமையாசரியர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பாராட்டுக்கள்.

தொடர்ந்து இம்மாதம் சூலை-2023) அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட தெரிவிக்கப்பட்டக் கூட்டத்தினை ஒத்திவைத்து ஒரு சிறப்புக் கூட்டமாக அனைத்து வகை அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 19.07.2023 புதன்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD SPD PROC PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.