Unit Transfer - முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 15, 2023

Unit Transfer - முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியீடு.



Unit Transfer - முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியீடு.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுவதற்கான அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1 முதல் 14-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூலை 17) வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் இருப்பின் ஜூலை 18-ம் தேதிக்குள் முறையிட வேண்டும். இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 19-ல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஜூலை 20-ல் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.