இரண்டாண்டு B.Ed படிப்பு: விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 22, 2023

இரண்டாண்டு B.Ed படிப்பு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்



இரண்டாண்டு பி.எட். படிப்பு: விண்ணப்பப் பதிவு தொடக்கம் Two-year-B.Ed.-Course-Application-Registration-Start

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கப்படும் 2 ஆண்டு பி.எட். படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கு தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் (என்சிடிஇ), பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. 2023-–24-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கையில் பி.எட். படிப்புக்கு 500 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.



இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள பட்டதாரிகள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



இது தொடா்பான கூடுதல் விவரங்களை மின்னஞ்சல் அல்லது 80157 58308 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.