மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பார்ம் டி & செவிலியர் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 17, 2023

மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பார்ம் டி & செவிலியர் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு



பார்ம் டி & செவிலியர் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

( தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டும் ) 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் கீழ்கண்ட படிப்புகளுக்கு சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online Application ) வரவேற்கப்படுகின்றன.

பார்ம் டி ( Pharm D Course ) செவிலியர் பட்டயப்படிப்பு ( Diploma Nursing Course ) தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவும் , வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும் .

www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.org மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

*தமிழகத்தில், 25 அரசு கல்லுாரிகளில், செவிலியர் பட்டயப் படிப்புக்கான, 2,060 இடங்கள் உள்ளன. அதேபோல், 24 தனியார் கல்லுாரிகளில் 'பார்ம் - டி' படிப்புக்கு, 720 இடங்கள் உள்ளன. இதில், 448 இடங்கள் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.*

*இந்த இரண்டு படிப்புகளுக்கும், 2023 -- 2024-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, சுகாதாரத் துறையின் இணையதளங்களில், இன்று காலை, 10:00 மணி முதல், 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*

*மேலும் விபரங்களை, இதே இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.*

www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.org

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.