பள்ளிக்கல்வித்துறை இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் (28/7/2023) நடக்கும் - (TNSE-JACTO ) - 26.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 26, 2023

பள்ளிக்கல்வித்துறை இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் (28/7/2023) நடக்கும் - (TNSE-JACTO ) - 26.07.2023



பள்ளிக்கல்வித்துறை இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி போராட்டம் (28/7/2023) நடக்கும் - (TNSE-JACTO ) - 26.07.2023

திட்டமிட்டபடி போராட்டம்

நமது(TNSE-JACTO) தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இன்று (26.07.2023) நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (28.07.2023) அன்று காலை 11.00 க்கு பள்ளிக்கல்வி இயக்குர் அலுவலக வளாகம் முன்பு நடைபெறும்.

வணக்கம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரான பேச்சுவார்த்தை ஏறக்குறைய 1.30 மணி நேரம் நடைபெற்றது ஆனால் ஆறு மாதம் எனக்கு கால அவகாசம் வழங்குங்கள் என்பதை தவிர இயக்குனர் வேறு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை

உறுதியான எந்த உத்தரவும் அரசிடமிருந்து பெறப்படாத நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவது சரியானதாக இருக்காது என்கிற ஒட்டுமொத்த முடிவின் *அடிப்படையில் வரும் 28/7/2023 அன்று திட்டமிடிட்ட படி போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்





தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO ) - 26.07.2023

அரசுக்கு நாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள்


1. தமிழக அரசே! ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக.

2. (அ) ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்கிடுக.

(ஆ) உயர்கல்வித் தகுதிக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய ஊக்க ஊதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துக.

(இ) அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும், தொகுப்பூதிய ஆசிரியர்களையும் முழுநேர ஆசிரியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்கிடுக.

3. தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நாள் 16.11.2012 ஆகவே அத்தேதிக்கு முன்னர் பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளித்திடுக.

4. பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அவர்களது பணிக்காலத்தை (Seniority) மட்டுமே தேவையான தகுதியாகக் கொள்ள வேண்டுமே தவிர ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறவேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக நிராகரித்து, அதற்குத் தேவையான சட்ட விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.

(ஆ) பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான விபரங்களையும், புள்ளி விவரங்களையும் EMIS ல் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யவேண்டியிருப்பதால் - அவை ஆசிரியர்களின் கற்பித்தல் பணியையும், மாணவர்களின் கற்றல் பணியையும் மிகக் கடுமையாக பாதித்து வருகின்றன.

ஆகவே EMIS பணிகளை மேற்கொள்ள தனியாக பணியாளர்களை நியமித்து, பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் பணிகள் தங்குதடையின்றி நடைபெற்றிட கல்வித்துறையே ஆவனசெய்திடுக.

5.(அ) பள்ளிக்கல்வித் துறையில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிடுக.

(ஆ) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிடுக.

6. சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், காலியாக இருக்கும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பிடுக.

7. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை உருவாக்கிடுக.

8. (அ) 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் பணி நியமன நாளில் இருந்து பணிவரன்முறை செய்திடுக.

(ஆ) ஆசிரியர் - அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களையும், இதரப் படிகளையும் மாற்றி உயர்த்தி அமைக்க, ஊதியக் குழுவை மத்திய மாநில அரசுகளே உடனடியாக அமைத்திடுக.

9. (அ) தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்விக்கென்று தனியாக ஒரு இயக்குநரகத்தை அமைத்திடுக.

(ஆ) மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்களை அமல்படுத்தாத ஆசிரியர் பிரிவுக்கு விரைந்து அமல்படுத்திடுக.

10. ஒவ்வொரு ஆண்டும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் என்று மாண்புமிகு கலைஞர் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்துக. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட ஆவன செய்க. அதுவரை அவர்களுக்கு சிறப்பூதியம் வழங்கிடுக.

இவண்,

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (TNSE-JACTO)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.