மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை - தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 19 يوليو 2023

மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை - தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை



மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை - தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை - NEET ban for one year if you don't get medical seat - National Medical Commission warning

அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (ஜூலை 20ஆம் தேதி) முதல் நடத்தப்படும் என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்பணத் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என்பது வழக்கமான நடைமுறையாக உள்ளது. தற்போது கூடுதலாக நீட் தேர்வெழுத ஓராண்டு தடையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.