LLB (Bachelor of Legislative Law) Courses, Admissions - LLB சட்டப் படிப்புக்கு 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 14, 2023

LLB (Bachelor of Legislative Law) Courses, Admissions - LLB சட்டப் படிப்புக்கு 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

3 ஆண்டுகளுக்கான எல்.எல்.பி மற்றும் எல்.எல்.பி (ஹானர்ஸ் ) படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்எல்பி சட்டப் படிப்புக்கு 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - You can apply for LLB Law from 17th

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி சட்டப் படிப்புக்கு வரும் 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்துசட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப் பள்ளிகளில் 3 ஆண்டுக்கான எல்எல்பி சட்டப்படிப்புக்கு விண்ணங்கள் பெறப்படுகின்றன. இதில் சேருவதற்கான விண்ணப்பங்களை www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக வரும்17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.