வரும் 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 15 يوليو 2023

வரும் 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் வரும் 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17(திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் வரும் 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17(திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் முர்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விஷேசமாகும்.

எனவே, லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் கூடுவது வழக்கம்.  எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜூலை 22-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.