அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 13 يوليو 2023

அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு

பள்ளி மேலாண்மைக்கழு கூட்டம் (SMC) சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.

பார்வை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/A11/பமேகு/ஒபக/2023, நாள். 05/07/2023.

பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது மாதந்தோறும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் பங்கெடுத்துப் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் துணை நிற்கும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், பள்ளித் தலைமையாசரியர். ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பாராட்டுக்கள்.

மேலும், சூலை-2023 மாதம் நடைபெறவுள்ளப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 14.07.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு:

பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திரக் கூட்ட நிகழ்வு அட்டவணை

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டப் பொருள் CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.