அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள செய்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 31 يوليو 2023

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள செய்தி

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள செய்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துகளோடு தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று மாணவச் செல்வங்களையும், ஆசிரிய பெருமக்களையும், அலுவலக பணியாளர்களையும், நூலகர்களையும், கல்வி அலுவலர்களையும் சந்தித்து உரையாட வேண்டும் எனும் இலட்சியத்துடன் 234/77 ஆய்வுப் பயணத்தை மாண்புமிகு அமைச்சர் Udhaystalin அவர்களின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியிலிருந்து தொடங்கினோம். இதுவரை 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்றுள்ளோம்.

61-வது தொகுதியாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் பொள்ளாச்சி தொகுதியில் அமைந்துள்ள காளியண்ணன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் முன்வைத்த பள்ளி மேம்பாடு சார்ந்த கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம்.

தொடர்ந்து பயணிப்போம்!

நம்பள்ளி நம்பெருமை
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு சபாநாயகர் அவர்களின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.6.86 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 303 திறன் வகுப்பறைகளை காணொலி வாயிலாக திறந்து வைத்து, கருணை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் 62-வது தொகுதியாக தாமோதரன் அவர்களின் கிணத்துக்கடவு தொகுதி ஒத்தக்கல்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பிரீமியர் மில்ஸ் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்!

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கற்பித்தல்; பள்ளிகளின் செயல்பாடுகளை வெளியுலகம் அறிவதற்கு சமூக வலைதள பயன்பாடு; மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள கலைப் பொருட்களின் காட்சியரங்கு; விளையாட்டு, சாரண சாரணியர் இயக்கங்களில் சாதனை படைக்கும் மாணவர்கள் என பலவகைகளிலும் அசத்தும் பிரீமியர் மில்ஸ் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... நன்றிகள்!

மாணவர்களின் கல்வி மேம்பாடு சார்ந்து பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்போம் என உறுதியளித்தோம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.