தமிழகத்திலேயே முதல் முறையாக, 'கல்வியும் காவலும்' என்ற புதிய திட்டம் துவக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 24 يونيو 2023

தமிழகத்திலேயே முதல் முறையாக, 'கல்வியும் காவலும்' என்ற புதிய திட்டம் துவக்கம்

தமிழகத்திலேயே முதல் முறையாக, 'கல்வியும் காவலும்' என்ற புதிய திட்டம் துவக்கம் - For the first time in Tamil Nadu, a new scheme called 'Kalviyum Kavalum' was launched

தமிழகத்திலேயே முதல் முறையாக, 'கல்வியும் காவலும்' என்ற புதிய திட்டம் பெரம்பலுாரில் துவக்கப்பட்டது.

பெரம்பலுார் மாவட்ட போலீசார் சார்பில், கல்வியும் காவலும் என்ற புதிய திட்டம், தமிழகத்திலேயே முதல் முறையாக பெரம்பலுாரில் நேற்று துவக்கப்பட்டது.

பெரம்பலுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டத்தை மாவட்ட எஸ்.பி., ஷ்யாமளா துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது:

முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ - மாணவியர், புதிய திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர். www.kalviseithiofficial.com


போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், போலீசாரின் பணி பொறுப்புகள், காவல் துறை பிரிவுகள், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் ஆயுதப்படை போலீசாரின் பணி, பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து வகுப்பு எடுக்கப்படும்.

கணினி குற்றங்களை கண்டறிய உருவாக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை ஒழிப்பு குறித்தும், சாலை விதிகளை பின்பற்றுதல், தற்கொலையை தவிர்த்தல், உயிருக்கு அச்சுறுத்தலான காரியங்களை செய்யாமல் தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். www.kalviseithiofficial.com

காவல்துறை மக்களின்நண்பன் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தவும், காவல் துறையினர் பணி குறித்து அவர்கள் அறியவும் இந்த திட்டம் அறிமுகம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.