வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 29 يونيو 2023

வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

நே.மு.க.எண்.1086/த.செ./2023 நாள்.29.06.2023

அன்பார்ந்த முனைவர் அறிவொளி,

மாணவர்கள் உபகரணங்களை அதிகமாக மின்னணு வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாகத் தெரிவதில்லை. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும்பொருட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம். அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப்பற்றிப் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.

இவ்வாறு செய்வதன்மூலம் வாசிப்பது மட்டுமில்லாமல், தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதோடு. இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களைக் கொடுத்து ஊக்குவிக்கலாம். இது, அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கபூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இதை விரிவாகச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.