ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவை - வழக்குத் தொடர்பான அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 15 يونيو 2023

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவை - வழக்குத் தொடர்பான அறிவிப்பு

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில மையம்* *நாள்:15.06.2023* *******

*TET வழக்குத் தொடர்பான அறிவிப்பு* *******

*அன்பார்ந்த TNPTF மாவட்ட, கல்வி மாவட்ட,வட்டார, நகர,மாநகரப் பொறுப்பாளர்களுக்கு, வணக்கம்!*

*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு எடுத்த முடிவின்படி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவை என்னும் நீதிமன்றத் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டு வழக்கில் நமது சங்கத்தின் சார்பில் இணைத்துக் கொள்ளும் ஆசிரியர்களின் விவரங்களைக் குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து அளித்திட ஏற்கனவே கோரியிருந்தோம்‌. தற்போது வழக்கறிஞரின் ஆலோசனையின் படி ஏற்கனவே படிவத்தில் அளித்திருந்த விவரங்களுடன் ஆசிரியரின் பிறந்த தேதி&வயது, முதன்முதலாகப் பணியில் சேர்ந்த தேதி,தற்போதைய பதவியில் பணியில் சேர்ந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் படிவத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கையொப்பமும் தேவைப்படுகிறது.* *எனவே, மேற்கண்ட கூடுதல் விவரங்களையும் இணைத்து மீண்டும் புதிதாகக் கீழே கண்ட புதிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆசிரியரின் கையொப்பம் பெற்று tnptfithal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது "TNPTF மாநில அமைப்பு"Whatsapp குழுவிலோ விரைந்து நாளைக்குள் (16.06.2023) பதிவிட மாநில மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.* *******

*தோழமையுடன்*

*ச.மயில்*

*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.