சிறப்பாசிரியர் (தச்சு, விவசாயம், நெசவு) பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 8 يونيو 2023

சிறப்பாசிரியர் (தச்சு, விவசாயம், நெசவு) பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Order from the Joint Director of School Education seeking post details of Special Teacher (Carpentry, Agriculture, Weaving) - சிறப்பாசிரியர் (தச்சு, விவசாயம், நெசவு) பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை 600006.

ந.க.எண்.13074/சி5/இ4/2023, நாள்.07.06.2023.

பொருள்:

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி சிறப்பாசிரியர் பணியிடங்களான (இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உள்ள) தச்சு, விவசாயம் மற்றும் நெசவு ஆகிய பணியிட விவரங்கள் கோருதல் - சார்ந்து.

பார்வை:

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) அலுவலகக் குறிப்பு. நாள்.19.04.2023 முதன்மைக்கல்வி அலுவலர்கள். தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட அரசு, நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்களான (இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உள்ள) தச்சு, விவசாயம் மற்றும் நெசவு ஆசிரியர் ஆகிய பணியிட விவரங்களை பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை எண், நாள் மற்றும் அரசாணை நகலுடன் இணைப்பில் உள்ள படிவத்தில் எந்த பணியிடங்களும் விடுபடாமல் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை உடன் c5sectioncose@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.