தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு நாள்:06.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 6, 2023

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - செய்தி வெளியீடு நாள்:06.06.2023

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

செய்தி வெளியீடு எண்: 1115

நாள்:06.06.2023

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.05.2023 முதல் பெறப்பட்டு வருகிறது. அதற்கான கடைசி தேதி தற்போது 20.06.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.