துணை மருத்துவ படிப்புகள் விண்ணப்பிக்க புது சலுகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 20 يونيو 2023

துணை மருத்துவ படிப்புகள் விண்ணப்பிக்க புது சலுகை

துணை மருத்துவ படிப்புகள் விண்ணப்பிக்க புது சலுகை - New offer to apply for paramedical courses

துணை மருத்துவ படிப்புகளில் ஒரு மாணவர் ஒரே விண்ணப்பம் வாயிலாக, ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, 19 துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.

மாணவர்கள், https://tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 28ம் தேதி வரை கடைசி தேதி.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

துணை மருத்துவ படிப்புகளுக்கு, 12,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றிற்கு மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இவர்களுக்கான தர வரிசை பட்டியல், அடுத்த மாதம் வெளியிடப்படும். அதேநேரம், மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' முறையில் நடைபெறுகிறது.

எனவே, கவுன்சிலிங்கின்போது, ஒரு மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்ய முடியும். அதில், தகுதியான மாணவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சேர்க்கை ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.