தேசிய உயர் கல்வி தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து முதலிடம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 6 يونيو 2023

தேசிய உயர் கல்வி தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து முதலிடம்!



தேசிய உயர் கல்வி தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து முதலிடம்! - National Higher Education Ranking List: IIT Chennai, Continues to Top!

உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக, முதலிடம் பெற்றுள்ளது.

மத்திய கல்வி துறை சார்பில், நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல் திறன் அடிப்படையில், தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை, மத்திய கல்வி துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங், நேற்று புது டில்லியில் வெளியிட்டார்.

இதில், 'டாப் 20' பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த நான்கு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி., - முதலிடம்; கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், 15; வி.ஐ.டி., 17 மற்றும் அண்ணா பல்கலை, 18ம் இடங்களை பிடித்துள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.