மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்தல் -ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 18 يونيو 2023

மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்தல் -ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் - CEO Proceedings

மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்தல் -ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் - CEO Proceedings Editing of Students' Notebooks -Advice to Teachers -CEO Proceedings

மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்வது, பாடக்குறிப்பு தொடர்பான திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை

அரசு பள்ளிக்கல்வித்துறை கல்வி உபகரணங்கள் பயன்பாடு -திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு /நகராட்சி/ஆதி திராவிடர் நல உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை பயன்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள் தொடர்பாக

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி/ஆதி திராவிடர் நல/அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை/ பட்டதாரி/ இடைநிலை/சிறப்பாசிரியர்கள்/உடற்கல்வி கற்றல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஈடுபட மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை முறையாக பயன்படுத்தி கற்பித்தல் செயல்பாடுகளில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களின் பாடக்குறிப்பேடுகள் மற்றும் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள் உரிய தேதியில் திருத்தப்பட்டு கையொப்பமிடவேண்டும். மேலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பாடக்குறிப்பேடுகளை தலைமையாசிரியர்களுக்கு முன்னிலைப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்னிலைப்படுத்தாத ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்க நேரிடும் என்ற விவரத்தினை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடவும், இதில் தனி கவனம் செலுத்திடவும் அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.