அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 18 مايو 2023

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

பின்னர் வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது.

கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.