அகவிலைப்படி உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர் சங்கங்கள் நன்றி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 19 مايو 2023

அகவிலைப்படி உயர்வு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர் சங்கங்கள் நன்றி

அகவிலைப்படி உயர்வு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர் சங்கங்கள் நன்றி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலை பணியாளர்கள் நன்றி

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா நேற்று சந்தித்தார். அப்போது அவர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அப்போது சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள். மாநில துணைத்தலைவர் ஏழுமலை, மாநில செயலாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர். அகவிலைப்படி உயர்வு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழியர் சங்கங்கள் நன்றி

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படிஉயர்வுவழங்கிய தற்காக தமிழக முதல்வரை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் (பொறுப்பு) த.அமிர்தகுமார், மாநில பொருளாளர் ஆர்.சி.எஸ். குமார், மாநில பிரச்சார செய லாளர் பா.தில்லைகுமரன் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல் வரை சந்தித்து அகவிலைப்பபடி உயர்வு வழங்க உத்தரவிட்ட தற்காக நன்றி தெரிவித்தனர்.

மேலும், தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடே சன், தமிழ்நாடு ஆசிரியர் முன் னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாநில தலை வர் சண்முகராஜா, நர்சுகள்பொது நலச் சங்க மாநில பொதுச் செயலாளர் கோபால் தேவி, மாநில தலைவர் (பொறுப்பு) வி.சந்திரகலா உள்ளிட்டோரும் முதல்வருக்கு நன்றி தெரி வித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.