ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள் - தமிழ்நாடு முழுவதும் நாளை(29.05.2023) கலந்தாய்வு மையங்களில் ஆர்ப்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 28 مايو 2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள் - தமிழ்நாடு முழுவதும் நாளை(29.05.2023) கலந்தாய்வு மையங்களில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் நாளை(29.05.2023) ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மையங்களில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கலந்தாய்வில் நடைபெற்று வரும் விதிமீறல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள் - கலந்தாய்வு மையங்களில் நாளை ஆர்ப்பாட்டம்!

ஊடகச் செய்தி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு. தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துவிட்டு தொடக்கக்கல்வித்துறையில் விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிர்வாக மாறுதல்களை எதிர்த்தும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் ஒன்றிய மாறுதல், மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்தக் கோரியும் நாளை (29.05.2023) தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு மையங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியீட்டுள்ள அறிக்கை:

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.