இடைநிலை ஆசிரியர் பயிற்சி: தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 8 مايو 2023

இடைநிலை ஆசிரியர் பயிற்சி: தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி: தனித்தேர்வர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்விபயிற்சி நிறுவன முதல்வர் வெ.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) தனித்தேர்வர்கள் மே 9 முதல் 13-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

அவர்கள்www.kalviseithiofficial.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற சான்றிதழ்கள், தேர்வுக் கட்டணம் மற்றும் இதரகட்டணத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.


தேர்வு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50; மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.100; பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15; ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 ஆகும்.

நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் ரூ.1000 கூடுதல் கட்டணம் செலுத்தி மே 15, 16-ம்தேதியில் விண்ணப்பிக்கலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.