திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 11.05.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 11 مايو 2023

திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 11.05.2023

திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு!

Publication of Revised Consultation Schedule – Proceedings of Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education – Date: 11.05.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 11.05.2023

பள்ளிக் கல்வி-2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் - திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல்-சார்பு. பார்வை:

1) சென்னை-6 பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள்.26.4.2023,02.05.2023 06.05.2023

பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம் 2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 06.05.2023 நாளிட்ட செயல்முறைகளில் நிருவாக காரணங்களுக்காக மேற்படி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இணைப்பில் காணும் கலம் 6ல் தெரிவித்துள்ளவாறு திருத்திய காலஅட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது



ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.