அரசு திரைப்பட நிறுவன பட்டப்படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 31 مايو 2023

அரசு திரைப்பட நிறுவன பட்டப்படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு



அரசு திரைப்பட நிறுவன பட்டப்படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு - Extension of time for admission to Govt Film Institute degree course

அரசு திரைப்பட நிறுவனத்தில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தமிழக அரசு எம்.ஜி.ஆர்திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் 2023-24-ம் கல்விஆண்டில் இளங்கலை காட்சிக்கலை ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் உள்ளிட்ட பட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 2-ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தது. தற்போது, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய கால அவகாசம் ஜூன் 15 வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 19 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை தகவல் தொகுப்பேட்டை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கால அவகாசத்தை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.