அண்ணா பல்கலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 5 முதல் சான்று சரிபார்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 25 مايو 2023

அண்ணா பல்கலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 5 முதல் சான்று சரிபார்ப்பு



அண்ணா பல்கலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 5 முதல் சான்று சரிபார்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை: 2023ம் கல்வியாண்டில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான கால அட்டவணை www.tneaonline.org ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களது பெயருக்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்

பொறியியல் கலந்தாய்வு - ஜூன் 5 முதல் 14 வரை முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு Engineering Consulting – First Phase Certificate Verification from 5th to 14th June

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 14 வரை நடைபெறும்;

அசல் மற்றும் நகல் சான்றிதழ் உடன் தேவையான படிவங்களை கொண்டு வர வேண்டும்

பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு அறிவிப்பு

குறிப்பிட்ட தேதியில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தல்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.